
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதியின் செயலாள் மக்கள் அதிருப்தி
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா, அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் சேர்த்து துணைப் பிரதமர் பதவியையும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்த நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சிக்குள்ளும் மோதல்களை உருவாக்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநரான 84 வயதான ஔட்டாரா, 2011 முதல் நாட்டை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
