இது தேவதைகளின் எண்கள்…
111,222,333 போன்ற தொடர் எண்களை நாம் அன்றாடம் பார்க்கக்கூடும். இந்த எண்கள் தேவதைகள் மறைமுகமாக நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை அனுப்புவதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு தொடர் எண்களும் நமக்கு உணர்த்தும் அர்த்தங்கள் குறித்து பார்ப்போம்.
- 111 – உங்கள் எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை அவற்றை புத்திசாலித்தனத்துடன் ஏற்று செயல்படுங்கள் என்பதை நினைவூட்டும்.
- 222 – நீங்கள் போகும் பாதை சரியானது. அதில் பொறுமையோடும் நம்பிக்கையோடும் செல்லுங்கள்.
- 333 – உங்கள் படைப்பாற்றலை பொறுமையோடு வெளிப்படுத்துங்கள்.
- 444 – உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் எண்.
- 555 – மாற்றத்துக்கான எண் இது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- 666 – உங்களை நீங்களே ஊக்குவிக்கப் பயன்படும் எண்.
- 777 – தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை வெளிக்காட்டும்.
- 888 – பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டும்.
- 999 – பழையதை விடுத்து புதியதை தொடங்கும் எண்.