இத்தாலியின் பிரதி அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார்.
இன்று (03) முதல் எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின்போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் மரியா திரிபோடி கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.