சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.

குறிப்பாக ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கான தங்கள் ஏற்றுமதி குறையுமானால் அதை ஈடுகட்டுவதற்கு ஏற்ப, வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் ஆராய்ந்து வருகின்றன.

ஐரோப்பிய யூனியனில் இணையாத பிரித்தானியா, இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை 24ஆம் திகதி கையெழுத்திட்டது.

இந்நிலையில், சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியா​டன் பிரதமர் கீர் ஸ்டார்​மர், சீனாவுடன் பல்வேறு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளார்.

இதனை அமெரிக்கா ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளடன், சீனாவுடனான வர்த்தக உறவு பிரித்தானியாவுக்கு ஆபத்தானமாக மாறும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )