
ட்ரம்பின் அமைதிக்கான சபையில் நெதன்யாகு இணைவு – சர்ச்சை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான சபையில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார்.
காசா போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்துள்ள நிலையிலும்,
இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது நடைபெறும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஹமாஸுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த “அமைதி வாரியம்” உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில், ஆட்சி திறன் மேம்பாடு, பிராந்திய உறவுகள், புனரமைப்பு, முதலீடுகள் மற்றும் பெரிய அளவிலான நிதி திரட்டல் ஆகியவற்றை ட்ரம்ப் மேற்பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் பல தலைவர்கள் இந்த குழுவில் இணைவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நெதன்யாகுவின் பங்கேற்பு, இந்த அமைதிப் முயற்சியின் நடுநிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
பலஸ்தீனியர்கள், “இரண்டாம் கட்ட அமைதி முயற்சிக்கு நெதன்யாகு தடையாக இருக்கலாம்” என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
