இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. செல்கிறார்

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. செல்கிறார்

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கிறார்.

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலிய அரசாங்கம்மீது இஸ்ரேல் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

ஆஸ்திரேலிய பிரதமரை பலவீனமான அரசியல் தலைவரென இஸ்ரேல் பிரதமர் விமர்சித்தார்.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆஸ்திரேலியாவின் தீர்மானத்துடன், போண்டி பயங்கரவாதத் தாக்குதலை தொடர்புபடுத்தி அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே ஆஸ்திரேலியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தால் தனக்கு இந்த அழைப்பு விடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார் என்று இஸ்ரேல் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த அழைப்பு ஏற்கப்படும் எனவும், விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் எனவும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )