போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

காசாவில் இருந்து ஹமாஸ் நேற்று ஒப்படைத்ததாகக் கூறப்பட்ட சடலங்கள்  இஸ்ரேல் மேற்கொண்ட பரிசோதனையில் அங்குள்ள கைதிகளின் உடல்களோடு தொடர்புடையவை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல் 02 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )