இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது தாக்குதல் – 23 பேர் பலி

இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 07 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஐ.நாவின் குரலை உலகம் கண்டுகொள்ளவில்லையென ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் அல் ஜசீரா நிருபர் ஹோசம் ஷபாத்தை இஸ்ரேல் கொலை செய்தமைக்கும் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹம்டன் பல்லால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா மீதான இஸ்ரேலின் போரில் சுமார் 50,082 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 113,408 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா அரசாங்க ஊடக அலுவலகம் தனது இறப்பு எண்ணிக்கையை 61,700 இற்கும் அதிகமாக புதுப்பித்துள்ளது, இடிபாடுகளுக்கு அடியில் காணாமற்போன ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.