காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதை காசாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண் ஒருவரும் 4 குழந்தைகள் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகே உள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

தெற்கு நகரமான கான் யூனிஸில் இடம்பெற்ற தாக்குதலிலும் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This