இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் ; ஈரானின் உச்ச தலைவர் விமர்சனம்

இஸ்ரேலிய குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போயிருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி ஹொசைனி கமேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் கூறுகையில்,
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் போல உள்ளது. அதன் உத்தரவுகளின்படி இஸ்ரேல் விளையாடுகிறது. அது செய்யும் குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போகிறது.
ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தைப்போல கடுமையாக பதிலடி கொடுப்போம்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் தெரிவித்துள்ளார்.