
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதம் – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குற்றச்சாட்டு
காசாவில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாகி வருவதாக இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
காசா நகரத்திற்கு அருகில் ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதேவேளை, பலஸ்தீன குழுக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க மறுத்து, மீண்டும் இராணுவமயமாக்க முயற்சி மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் தனது மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறி அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை செயற்படுத்த தவறியதாக குற்றம் சுமத்தினார்.
போர்நிறுத்தம் ஒக்டோபரில் ஆரம்பமானதிலிருந்து, இஸ்ரேல் காசா மீது சுமார் 800 தாக்குதல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் சுமார் 386 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
