
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடியாணை (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 507 சாரதிகளும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய 39 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 5,244 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
