அமெரிக்காவில் காரை மோதச் செய்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ட்ரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட ஆயுதக் குழுவால் ஈர்க்கப்பட்டதாகக் குறிக்கும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக FBI அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி பைடன், நியூ ஆர்லியன்ஸில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக துயரப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், லாஸ் வேகாஸில் உள்ள டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான ஒரு ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்ததில் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேக நபரான 42 வயதான ஷம்சுத்-தின் ஜப்பார் தனியாக செயல்பட்டதாக நம்பவில்லை என்றும், அவரது டிரக்கின் இருந்து அதிகாரிகள் ISIS கொடியைக் கண்டுபிடித்ததாகவும் FBI தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பயங்கரவாத அமைப்புகளுடனான நபர் கொண்டுள்ள தொடர்புகளைக் கண்டறிய செயல்பட்டு வருவதாக” நியூ ஆர்லியன்ஸ் FBI இன் பொறுப்பான உதவி சிறப்பு முகவர் அலெதியா டங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த தாக்குதலுக்கு ஜப்பார் மட்டுமே பொறுப்பு என்று நாங்கள் நம்பவில்லை. “அவரது அறியப்பட்ட கூட்டாளிகள் உட்பட அனைத்து தடயங்களையும் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதுல் புதன்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸின் வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு காலாண்டின் மையத்தில் உள்ள பரபரப்பான சாலையில் நடந்துள்ளது.
சந்தேக நபரின் கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பல பாதசாரிகள் மீது மோதியதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதலின் பின்னர் அமெரிக்க குடிமகனும், இராணுவ வீரருமான ஜப்பார், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.