நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடா?

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று சதவீத சலுகையை இரத்து செய்யும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் விலகியுள்ளது.
இதனால் நேற்று இரவு கொழும்பு உட்பட நாட்டின சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற வாகனங்கள் வரியை காத்திருந்தன. பெற்றோல் தட்டுப்பாட ஏற்படும் என பரவிய செய்தியின் பிரகாரம் இந்த வரிசை ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றும்தேவையில்லாமல் பீதி அடைய தேவையில்லை என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெற்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெற்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.