
‘சூர்யா 45’ படப்பிடிப்பு முடிந்ததா?
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கு சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் இருபது வருடங்கள் கழித்து இப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடிக்கவுள்ளார்.
கடந்த மாதம் இப் படத்துக்கான படப்பிடிப்புகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CATEGORIES சினிமா
