மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்?

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் படி, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை ஆறு தசம் எட்டு வீதம் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமா சமர்ப்பிக்கலாம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து பொது மக்களின் வாய்மொழி கருத்துகளை பெற்றுக்கொள்ள ஒன்பது மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு முன்னர் சமரப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.