இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டம்?

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டிருப்பினும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸார் சந்தேகநபர் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள, இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இதுபோன்ற நபர்களை இதற்கு முன்பு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.