credit, debit கார்ட் செலுத்தல்களுக்கு 3% அறவிடப்படுகிறதா? உடனடியாக முறையிடுமாறு மத்திய வங்கி அறிவிப்பு

credit, debit கார்ட் செலுத்தல்களுக்கு 3% அறவிடப்படுகிறதா? உடனடியாக முறையிடுமாறு மத்திய வங்கி அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் credit மற்றும் debit கார்ட்களில் கட்டணத்தை செலுத்தும் போதே 2.5 அல்லது 3 சதவீத கட்டணம் மேலதிகமாக அறவிட வர்த்தக நிலையங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போதே அல்லது சேவைக்கான கட்டணங்களை செலுத்தும் போதோ உரிய விலைகளுக்கு அப்பாலான எவ்வித கட்டணங்களையும் credit மற்றும் debit கார்ட் செலுத்தல்களுக்கு அறவிட முடியாது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் பிரகாரம்தான் கார்ட் பரிவர்தனைகள் இடம்பெறுகின்றன.

எனவே, வாடிக்கையார்களிடம் மேலதிகமாக 2.5 அல்லது 3 சதவீத கட்டணத்தை வர்த்தக நிலையங்களால் அறவிட முடியாது.

அவ்வாறு அறவிடும் வர்த்த நிலையங்களில் பற்றுச்சீட்டுகளை பெற்று உரிய வங்கியில் முறைப்பாடு செய்வதன் ஊடாக மீண்டும் குறித்த பணத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This