அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி அணு நிலையத்தை தீவிரமாக சீரமைக்கும் ஈரான்

அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி அணு நிலையத்தை தீவிரமாக சீரமைக்கும் ஈரான்

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் 2 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் போர்டோ நிலத்தடி அணு நிலையம் அமைந்துள்ள மலை பகுதியில் பல பணியாளர்கள் இருப்பதை காட்டுகிறது.

மேலும் மலை முகட்டுக்குக் கீழே பல வாகனங்கள் நிலத்தடி அணு நிலைய வளாகத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளது.

 

Share This