வளைகுடாவில் 9 நாடுகள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்

வளைகுடாவில் 9 நாடுகள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்

கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப் பெரிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஈரான் ஒரே நாளில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மையமான கத்தார் நாட்டில் உள்ள ராஸ்லபான் எரிசக்தி மையத்தின் மீது 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 21 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.  அத்துடன், சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், பக்ரைன், ஜோர்டான், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஓமன் மற்றும் மத்திய இஸ்ரேலிலும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களில் பாரிய சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )