ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள்

ஈரான் – இஸரேல் போர்!!! இலங்கைக்கு பொருளாதார ரீதியாக காத்திருக்கும் சவால்கள்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது கிடைக்கக்கூடிய அறிக்கைகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் இலங்கையை பாதிக்கும் பல வழிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு எழுபது டொலர் அளவைத் தாண்டியுள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்த விலை அதிகரிப்பு ஆகும்.

மேலும், இந்த போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறிப்பாக வேலை பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத் துறையை கடுமையாக பாதிக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )