IPL 2025 – பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுகள்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் தலைவருக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினால் தலைவருக்கு விதிக்கப்படும் தடையை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் வந்தாலே அது கிரிக்கெட் காலம் என்று கொண்டாடப்படும் வகையில் கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை (இன்று) தொடங்க இருக்கின்றன.
இந்த சூழலில், ஐபிஎல் அணிகளில் விளையாடும் கேப்டன்களுடனான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக ஐபிஎல் போட்டிகளின் கடந்த சீசனில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் தலைவருக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் தலைவர் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன.
இது பற்றியும், கொரோனா காலத்தில் தடை விதிக்கப்பட்ட பந்துகளின் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் சர்வதேச போட்டிகள் இல்லை என்பதால் உமிழ்நீரை பந்துகள் மீது பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.