ஐபிஎல் 2025 – பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விருவிருப்பாக நடந்து வருகின்றது. தற்போது பிளே ஓப் வாய்ப்பை உறுதி செய்ய ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமான செயற்பட்டு வரும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போதைய நிலையில், நான்கு அணிகள் தங்களின் பிளே ஓப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். கடந்த காலங்களில் மிகவும் ஆதிக்கம் செலுத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றது.
குறிப்பாக சென்னை அணி இம்முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி கடைசி இடத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடி ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
அதேபோல் மிகவும் துடுப்பாட்ட பலம்வாய்ந்த அணிகளான ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளும் இம்முறை மோசமாக விளையாடி வருகின்றது.
இந்த மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் தற்போது கடைசி மூன்று இடங்களில் உள்ளன.
எனினும், கடந்த ஆண்டில் மிகவும் மோசமாக விளையாடிய டெல்லி, பஞ்சா மற்றும் குஜராத் போன்ற அணிகள் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக செயற்பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
இதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாத மூன்று அணிகள் பிளே ஆப் ரேஸில் இடம் பிடித்துள்ளன. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவிர மீதமுள்ள ஆறு அணிகளில் நான்கு அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை 90 சதவீதம் உறுதி செய்துள்ளனர்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூர்அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவுடன் முதலிடத்தை பிடித்துள்ளனர். இன்னும் அவர்களுக்கு நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அதில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதும்.
குஜராத் டைட்டன்ஸ்
சுப்மான் கில் தலைமையில் கடந்த ஆண்டு மோசமாக விளையாடிய குஜராத் அணி, இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு நெட் ரன் ரேட் நல்ல விதத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் சில தொடர் தோல்விகளை சந்தித்தாலும், தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அதில் ஆறில் வெற்றி பெற்று மும்பை, மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட போதுமானதாக இருக்கும்.
h
அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.
இன்னும் 5 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் அதில் இரண்டு அல்லது மூன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப்பிற்கு தகுதி பெறலாம்.
எனினும், பஞ்சாப் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கும் இன்னும் பிளே ஆப் செல்ல சிறிது வாய்ப்புள்ளது அடுத்தடுத்த போட்டிகளில் அபார வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறலாம்.