ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு

ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு

2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் வெளியிட்டுள்ளார்.

“ரஹானேவின் அனுபவமும் தலைமைத்துவமும் விலைமதிப்பற்றதாக இருக்கும், அதே நேரத்தில் எங்களுக்கு ஒரு முக்கிய வீரரான வெங்கடேஷ் ஐயர் வலுவான தலைமைத்துவ குணங்களைக் கொண்டுள்ளார்.

அணியை வழிநடத்தும் அவர்களின் திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என வெங்கி மைசூர் தெரிவித்துளு்ளார்.

இந்நிலையில், கொல்கத்தான அணியை வழிநடத்துவது ஒரு மரியாதை. எங்களிடம் ஒரு நல்ல சமநிலையான அணி உள்ளது, மேலும் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்” என ரஹானே தெரிவித்துள்ளார்.

இன்றும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள 2025 ஐபிஎல் தொடரில் எதிர்வரும் 22ஆம் திகதி ஈடன் கார்டனில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.

முன்னதாக 2012,2014 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This