இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முதலீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முதலீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

2025 ஜனவரி 27 முதல் 29 வரை கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முன்மொழியப்பட்ட பரஸ்பர ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த பேச்சுவார்த்தைகள் நட்பு மற்றும் கூட்டுறவு முறையில் கொழும்பில் நடத்தப்பட்டன, இரு தரப்பினரும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் துணை சட்ட ஆலோசகர் திலானி சில்வா தலைமை தாங்கினார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுக்குழுவிற்கு அந்நாட்டு நிதி அமைச்சின் பொருளாதார நிபுணர் டாக்டர் ஹமீத் நஸ்ர் அப்துல்காதிர் தலைமை தாங்கினார்.

இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This