‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்

‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்

இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும்.  16 திணைக்களங்களையும் 50 சேவைகளையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பகட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் 30இற்கும் அதிகமான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருதும் இவ்வருட இறுதிகள் பெரும்பாலான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

அரசுக்கான வரிப்பணம் உட்பட அனைத்து கொடுப்பனவு முறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘GovPay’  முறை அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல் தண்டப்பணத்தை கூட இத்திட்டத்தின் ஊடாக செலுத்த முடியும் என அரசாங்கம் கூறியுள்ளது.

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆரம்பகட்டமான திட்டமே இது. எதிர்வரும் 5 வருடங்களில் மக்களை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஊடாக மக்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல்கள், நேரம் மற்றும் கால விரயங்கள் தவிர்க்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.

அத்துடன், இத்திட்டத்தின் ஊடாக ஊழல் – மோசடிகளும் ஒழிக்கப்படும் எனவும் அரசு எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள மக்கள் கொழும்புக்கு கடந்த காலத்தில் வரவேண்டியுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் முறையின் ஊடாக பிரதேச செயலகத்திலேயே தமது விண்ணப்பங்களை டிஜிட்டல் முறையின் ஊடாக வழங்கி, ஆவணங்கள் கொழும்பில் உறுதிப்படுத்தப்பட்டதும் குறித்த நிதியையும் அங்கேயே பெற்றுக்கொள்ளும் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களின் நகல்களை இலங்கை தூதரக பணியகங்களில் மின்னணு முறையில் பெற அனுமதிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் நன்மை கருதி இத்திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

Share This