அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினம் – காலி முகத்திடலில் நடைபவனி

அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினம் – காலி முகத்திடலில் நடைபவனி

அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினத்தையொட்டி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த கெட் வோக் நடைபவனி நிகழ்வு இன்று கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சமர்ப்பித்த சர்வதேச அரேபிய சிறுத்தை நாள் என்ற தீர்மானம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இத்தினம் ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் 10 ஆம் திகதி “அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அரேபிய சிறுத்தை மிகவும் அழிந்து வரும் பெரிய பூனைகளின் இனங்களில் ஒன்றான (சிங்கம், பாந்தெரா டைகிரிஸ், மலை சிங்கம், ஜாகுவார், சிறுத்தை மற்றும் வனவிலங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்) விழிப்புணர்வு தினமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது .

அரேபிய சிறுத்தையின் தாயகமாக கருதப்படும் சவூதி அரேபிய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Share This