
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவருகிறது.
இந்தப் போராட்டங்களால் இதுவரை பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்கள் அடங்களாக 7 போ் உயிரிழந்துள்ளனா்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலோா் லூா் இனத்தைச் சோ்ந்தவா்கள் ஈரான் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ் உட்பட நாட்டின் பிரதான நகரங்களிலும், கிராமபுறங்களிலும் ஆயிரக்கணக்கானோா் தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்திவருவதால் அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
