சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கு காப்புறுதி திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கு காப்புறுதி திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியனார்.

பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலா தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு தலத்திற்கும் சுமார் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தற்போது முடிவு செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

Share This