அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் – அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.
குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறுஆய்வு செய்து இறுதி தீரமானத்தை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த திட்டங்களில் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய சில திட்டங்கள் இருப்பின், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.