பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI, 2021=100) வருடாந்த சதவீத மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் 2025 ஜனவரி மாதத்தில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் குறுகிய கால பணவீக்க முன்னறிவிப்புகளுக்கு இணங்க, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக எதிர்மறை பணவீக்க விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 டிசம்பரில் பதிவான 1.7 சதவீத பணவாட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஜனவரியில் பணவாட்டம் 4.0 சதவீதம் வரை பாரிய சரிவை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் 2024 டிசம்பரில் 0.8 சதவீதத்திலிருந்து 2025 ஜனவரியில் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம், 2024 டிசம்பரில் 3.0 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரி 2025 இல் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.