ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்

ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகை​யில், ஏற்​றுமதியை ஊக்​கு​விக்க 20 ஆயிரம் ரூபா கோடியில் சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு தயா​ராகி வரு​கிறது.

இந்​திய பொருட்​களின் இறக்குமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமுல்​படுத்​தி​யுள்​ளார்.

மேலும், ரஷ்​யா​வில் இருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய், ராணுவ தளவாடங்​களை கொள்​முதல் செய்​வ​தால் கூடு​தல் அபராத​மும் செலுத்த நேரிடும் என்று இந்​தி​யாவை எச்​சரித்​துள்​ளார்.

இந்த வரி விதிப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்​றும​தி​யாளர்​களை பாது​காக்க இந்​தியா 20 ஆயிரம் ரூபா கோடி மதிப்​பிலான ஒரு மிகப்​பெரிய ஏற்​றுமதி திட்​டத்தை தயாரித்து வரு​கிறது.

தற்​போதைய வர்த்தக நிச்​சயமற்ற தன்​மை​களுக்கு மத்​தி​யில் இருந்து ஏற்​றும​தி​யாளர்​களைப் பாது​காக்க புதிய விரி​வான உத்திகளு​டன் கூடிய இந்த ஏற்​றுமதி திட்​டத்தை மத்​திய அரசு அடுத்த சில வாரங்​களில் செயல்​படுத்​தும் என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

‘பிராண்டு இந்​தி​யா’ பெயரில் பொருட்​களை சந்​தைப்​படுத்​து​மாறு வர்த்தக மற்​றும் தொழில் துறை அமைச்​சகம் ஏற்றுமதியாளர்களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இந்த திட்​டம் ஏற்​றும​தி​யாளர்​களை சர்​வ​தேச வர்த்தக ஏற்ற இறக்​கங்​கள் மற்​றும் சந்தை நிச்​சயமற்ற தன்​மை​களி​லிருந்து பாது​காக்​கும் என்று அரசு நம்​பு​கிறது. இதனை வரும் செப்​டம்​பர் மாதத்​துக்​குள் அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

Share This