புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட இந்தியாவின் ஒப்புதல் தேவை – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளியிட இந்தியாவின் ஒப்புதல் தேவை – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

பிரதமர் மோடியின் விஜயத்தின் போது இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர்  நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊகட மாநாட்டில், அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழ என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை அவசரமாக யாராவது கோரினால், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இதனைப் பெறலாம்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுடனும், தொடர்புடைய அமைச்சகங்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அமைச்சர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This