விஜித ஹேரத்தை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

விஜித ஹேரத்தை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிட்வா புலயால் இலங்கை பாதிப்பட்ட போது முதல் நாடாக இந்தியா வழங்கிய உதவிகளையும், ‘சாகர் பந்து’
நடவடிக்கையையும் அமைச்சர் பாராட்டினார்.

மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்ட அவரது உத்தியோகப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )