
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு
எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண தொடர் போட்டிக்கான டிக்கெட் கறுப்புச் சந்தையில் ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், டிக்கெட் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவிலான கிடைக்கும் தன்மை மற்றும் அதிக தேவை ஆகியவை இரண்டாம் நிலை சந்தை விலைகளை மதிப்புக்கு அப்பால் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும், இந்த வாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வலைத்தளத்தில் மிகக் குறைந்த டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.
இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மும்பைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புவிசார் அரசியல் பதட்டங்களைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முன்னதாக முடிவு செய்திருந்தது.
எவ்வாறாயினும், நீண்ட நாள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புக்கொண்டது.
இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு ஏழு மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளம் மோதம் போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் அறிவித்ததிலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அமினுல் இஸ்லாமும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு எதிராகப் போட்டியில் விளையாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் முடிவை மறுபரிசீலனை செய்ததற்காக பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
