சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 198,235 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 20.4 சதவீத அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து 46,473 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இது 23.4% ஆகும்.

கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 19,764 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,500 பேரும், சீனாவிலிருந்து 12,294 பேரும் பிரான்சிலிருந்து 10,495 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,566,523 ஆகும்.

இவர்களில் 325,595 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 118,916 பேர் ரஷ்யாவிலிருந்தும், 151,141 பேர் பிரித்தானியாவில் இருந்தும் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 

Share This