மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மலையகப் பகுதிகளிலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை இன்று உயர்வடைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பிரதேசங்களில் ஒரு கிலோ தக்காளி மற்றும் எலுமிச்சையின் மொத்த விலை சுமார் 80 ரூபாயாக காணப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ பாகற்காய் மொத்த விற்பனை விலை 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.