
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 68 வீதமானவர்கள் தொற்றை மற்றுமொருவருக்கு ஏற்படுத்தக்கூடும் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
அதிகளவான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 115 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் பதிவாகியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 1,500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
CATEGORIES இலங்கை
