ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் Yan Oya படுக்கைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பின் சில பகுதிகளிலும் 50 மி.மீற்றருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளபோதும், அது வெள்ள அபாய மட்டம் வரை உயரவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், சுமார் 34 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்ட அவர், தெதுறு ஓயா, இராஜாங்கனை மற்றும் சேனநாயக்க சமுத்திரம் உட்படப் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்மட்டத்தைக் குறைக்கத் திறக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )