நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிதிக் குழுவின் அறிக்கையில், நாட்டில் மதுபான உற்பத்தி இவ்வாண்டின் முதல் பாதியில், முந்தைய இரு ஆண்டுகளுடன் (2023- 2024) ஒப்பிடும்போது 22 வீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் காணப்படாத ஒரு போக்கைக் காட்டும் வகையில், மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மது வரிகள் காரணமாக அரசாங்க வருவாயும் 23 வீதம் அதிகரித்துள்ளது. எனினும், 2022 ஆம் ஆண்டில் 26 மில்லியன் லிட்டராக இருந்த நாட்டில் மதுபான நுகர்வு, 2024ஆம் ஆண்டில் 19.31 மில்லியன் லிட்டராகக் குறைந்துள்ளது.

மதுபான விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணங்களாக இருந்தன. மது வரி அதிகரிப்பால் சட்டவிரோத மதுபான நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 30-35 மில்லியன் லிட்டர் மதுபானம் சட்டவிரோதமாக நுகரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This