முன்னணி நடிகர்களின் குரலில்…முஃபாசா: த லயன் கிங்

முன்னணி நடிகர்களின் குரலில்…முஃபாசா: த லயன் கிங்

பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் முஃபாசா: தி லயன் கிங் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப் படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தையான முபாசா கடந்து வந்த பாதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப் படத்துக்கான ஒவ்வொரு மொழிக்குமான டப்பிங்குக்கும் முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மொழிக்கான கதாபாத்திரங்களுக்கான குரலை அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், ரொபோ ஷங்கர், விடிவி கணேஷ், நாசர், சிங்கம் புலி, செல்வராகவன் உள்ளிட்டோர் கொடுத்துள்ளனர்.

இத் திரைப்படம் எதிர்வரும் 20 ஆம் திகதி தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This