சஜித் வழங்கிய பதவியை ஏற்க மறுத்தார் இம்தியாஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கர், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
எனினும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை அந்தப் பதவிக்கு மீண்டும் நியமித்தார்.
ஆனால், அவர் இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், அதை அவர் ஏற்க மாட்டார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.