ஐ.ம.ச.வின் திருகோணமலை மாவட்ட தலைவராக இம்ரான் மகரூப் எம்.பி நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டது.