அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள்

அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள்

மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

”தன்னைச் சந்திக்க வந்த நிறுவனங்களின் குழு சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரியதாகவும், அதற்கு தமக்கு பணத்தைத் தருவதாகவும் கூறினர்.

என்றாலும், அந்த முன்மொழிவுகளுக்கு நாம் தயாராக இல்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அரசியலில் இருந்து ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட வேண்டும்.  பொது சேவையில் ஊழல் இன்னும் அதிகமாக உள்ளது. அதற்கு அவசர தீர்வுகள் தேவை.” என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த கூறியுள்ளார்.

Share This