சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு முக்கிய கோரிக்கை

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு முக்கிய கோரிக்கை

சிவனொளிபாத மலைக்கு வந்து செல்லும் உள்நாட்டு யாத்திரிகர்கள், ஊசி மலைப் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் உக்கா பொருட்களை வீசி செல்வதால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது என சுற்று சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாத்திரிகர்கள் ஊசி மலை பகுதியில் தங்களது நேர்த்தி கடன்களை முடித்து விட்டு அப்பகுதியில் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உக்கா பொருட்களால் சுற்று சூழல் பாதிப்பது போன்று பல்வேறு நோய்களும் ஏற்படுத்துகிறது.

ஊசி மலை பகுதியிலும் மற்றும் சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையிலும் துர்நாற்றம் வீசுவதுடன், சூழலின் அழகும் பாதிக்கிறது. இதனால் குப்பைகளை வீதிகளில் வீசாது உரிய இடத்தில் வீசுமாறு குறித்த அதிகாரி மக்கயாத்திரிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(செய்தி – மஸ்கெலியா நிருபர்)

Share This