பகிடிவதை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

பகிடிவதை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வகுப்பது அவசியம் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்து, கொடுமை ஒழிப்பு தேசிய பணிக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே நேற்று (ஜூலை 2) நடைபெற்ற முதல் கலந்துரையாடலின் போது வெளிப்பட்டது.

இந்த சந்திப்பில்,

கொடுமைப்படுத்தலை முற்றிலும் ஒழிக்கல்

ஏற்கனவே உள்ள சட்டங்களை புதுப்பித்தல்

பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் புதிய பொறிமுறை உருவாக்கல் ஆகியவை முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This