இஸ்ரேலில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத்  திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry visa) இந்நாட்டிற்கு வந்தவர்களின் மறு நுழைவு வீசாவின் செல்லுபடியாகும் காலத்தை 2025.07.31 வரை நீட்டிக்க அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை (PIBA) முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இஸ்ரேலுக்கான சர்வதேச விமானங்கள் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதால், மறு நுழைவு வீசாவில் இந்நாட்டிற்கு வந்தவர்கள், மறு நுழைவு வீசா காலாவதியான பின்பும், 2025.07.31 வரையிலான நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில், இஸ்ரேலில் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )