பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி – ஜனாதிபதி அறிவிப்பு
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திவரும் ஜனாதிபதி இதுதொடர்பில் மேலும் கூறியதாவது,
கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது என்றும் ஜனாதிபதி கூறினார்.