இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் 8,000 முதல் 13,000 வரை சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன்  பவுண்ட் வரை பொருளாதார சேதம் ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்த சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகளில் இருந்து பெரும் லாபம் ஈட்டி வருவதாகவும், அந்த வருவாய்கள் பிற குற்றச்செயல்களுடனும் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )