
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு இளங்குமரனுக்கு உத்தரவு
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்தப் உத்தரவை வழங்கியுள்ளது.
